Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உங்கள் வாழ்வில் இனி தென்றல் வீசப்போகிறது..கல்லூரி கனவு..

உங்கள் வாழ்வில் இனி தென்றல் வீசப்போகிறது..கல்லூரி கனவு..

By: Monisha Sat, 25 June 2022 9:44:06 PM

உங்கள் வாழ்வில் இனி தென்றல் வீசப்போகிறது..கல்லூரி கனவு..

தமிழ்நாடு: 'நான் முதல்வன்' என்ற திட்டத்தின் கீழ் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் ' கல்லூரி கனவு' என்ற திட்டத்தை இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஹச்.சி.எல். நிறுவனம் 2,500 பேரை தேர்வு செய்து பயிற்சி, பணி ஆணை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சிக்கான செலவை தமிழக அரசே ஏற்க உள்ளது.

இன்று நடைபெற்ற 'கல்லூரி கனவு' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின். மு.க. ஸ்டாலின் பேசுகையில் ," அறிவை விரிவு செய் அகண்டமாக்கு.. விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை.. அணைந்துகொள்.. உன்னை சங்கமமாக்கு.. மானிட சமுத்திரம் நானென்று கூவு.. என பாடினர் பாவேந்தர் பாரதிதாசன்.

college,breeze,life,dream ,ஹச்.சி.எல். நிறுவனம், பயிற்சி, கல்லூரி கனவு,அறிவு,

உங்களுக்கு நான் சொல்வது இதுதான். இன்று முதல் புதிய மனிதர்களாக நீங்கள் ஆகுகீறீர்கள்.
வருங்கால சமுதாயம் உங்களுக்கு ஒளிமயமானதாக மாறப்போகிறது.உங்கள் வாழ்வில் தென்றல் வீசபோகிறது.. எல்லா இடத்திலும் அறிவு மேம்பாடு அடையட்டும் " என்றார்.

Tags :
|
|