நெருப்பு பொறி பறக்க ஒரு கிலோமீட்டர் தூரம் பைக்கை இழுத்துச் சென்ற கார்
By: Nagaraj Sat, 05 Nov 2022 10:59:26 PM
உத்தரபிரதேசம்: பைக் மீது மோதி இழுத்து சென்ற கார் பற்றிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் அருகே, பைக் மீது கார் மோதி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சாலையில் அதனை இழுத்துச்சென்ற கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
இந்திராபுரம் பகுதியில், இருசக்கர வாகன ஓட்டி மீது கார் மோதியதில்,
கீழே விழுந்த நபர் கார் ஓட்டுநரை கீழே இறங்க கூறியுள்ளார். ஆனால் கீழே
இறங்காத ஓட்டுநர், கார் முன்புறம் சிக்கிய பைக்குடன் காரை வேகமாக
செலுத்தியுள்ளார்.
இதனால் சாலையில் நெருப்பு பொறி
பறந்த நிலையில், பின்னே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் காரை துரத்தி
சென்றனர். இக்காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
Tags :
road |
bike |
views |
web |