மின் தேவை அதிகம் இருப்பதால் மின் கட்டணத்தில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு
By: vaithegi Sat, 24 June 2023 11:24:16 AM
இந்தியா: கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மின் தேவையும் அதிகமாக இருக்கிறது. அதனால் மின்கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு ... இந்தியாவில் கடந்தாண்டுகளை விட இந்தாண்டு கோடை வெயில் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது.
அதனால் பலர் வீடுகளில் ஏசி, பேன் என மின் சாதன பொருள்களை அதிகம் பயன்படுத்தினார்கள். அதனால் மின் தேவை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மின் நுகர்வு, மற்ற ஆண்டுகளை விட உச்சம் தொட்டு உ ள்ளது.
மேலும் அரசும் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த நிலையில் மின் தேவை அதிகம் இருப்பதால் மின் கட்டணத்தில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
அதாவது 2024 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முத்தம் மின்கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதையடுத்துஉஉ இது குறித்து வெளியான அறிவிப்பில் மின்தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் 10 முதல் 20 சதவீதம் வரை உயர வாய்ப்பு இருப்பதாகவும்,சூரிய ஒளி கிடைக்கும் நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு 10 – 20 சதவீதம் கட்டணத்தை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்புதிய கட்டணம் 2024 ஏப்ரல் 1 முதல் வணிக மற்றும் தொழில்துறைக்கு அமலாகிறது.