Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசியால் இந்தியாவில் 53 உயிரிழப்புகள் தடுக்கப்பட்டதாக தகவல்

கொரோனா தடுப்பூசியால் இந்தியாவில் 53 உயிரிழப்புகள் தடுக்கப்பட்டதாக தகவல்

By: Nagaraj Sat, 25 June 2022 10:26:17 AM

கொரோனா தடுப்பூசியால் இந்தியாவில் 53 உயிரிழப்புகள் தடுக்கப்பட்டதாக தகவல்

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசியால் 2021ம் ஆண்டில் ஏற்பட இருந்த 27 முதல் 53 லட்சம் வரையிலான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வுஹான் நகரிலிருந்து உருவாகிய கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப் படைத்தது. உலக அளவில் இரண்டு நாடுகளுக்கு பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது. முதல் அலை, இரண்டாம் அலை என்று அடுத்தடுத்து அலைகள் வந்து உலகில் பல நாடுகளுக்கு நெருக்கடியை கொடுத்தது. இதனால் கடந்த இரண்டு வருடங்களாக உலகமே முடங்கியது.

vaccine,researchers,lives,dosage,distribution,corona ,தடுப்பூசி, ஆய்வாளர்கள், உயிர்கள், சமஅளவு, விநியோகம், கொரோனா

இந்தியாவில் முதல் மற்றும் இரண்டாம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. மூன்றாவது அலை வந்த போதிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்ததால் பெரிய பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது. தற்போது ஜூலை மாதம் இந்தியாவில் நன்கு மழை வரலாம் என்று ஐஐடி நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியில் கொரோனாவுக்கு எதிராக நம் கையில் இருந்த ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும் தான்.

உலகில் தடுப்பூசிகள் விநியோகம் செய்ய ஆரம்பித்தவுடன், பல நாடுகள் உடனடியாக தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசிகளை வாங்கி செலுத்தியது. இந்தியாவில் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்ற விழிப்புணர்வு அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் அனைவரும் தடுப்பூசி போட மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்தின் லண்டன் நகரில் இம்பீரியல் கல்லூரி தலைமை ஆராய்ச்சியாளர் ஆலிவர் வாட்சன் உள்ளிட்ட ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் படி, இந்தியாவில் கொரோனா தடுப்பூசியால் 2021ம் ஆண்டில் ஏற்பட இருந்த 27 முதல் 53 லட்சம் வரையிலான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. மேலும் சர்வதேச அளவில் 2 கோடி பேரின் உயிரிழப்பு ஏற்படாமல் கொரோனா தடுப்பூசி தடுத்துள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகளவில் தடுப்பூசிகளை சம அளவில் விநியோகம் செய்து இருந்தால் இன்னும் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.

Tags :
|
|