Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரவலை கட்டுப்படுத்திய 10 மாவட்டங்கள்... சற்றே ஆறுதல் தகவல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்திய 10 மாவட்டங்கள்... சற்றே ஆறுதல் தகவல்

By: Nagaraj Mon, 11 May 2020 12:52:40 PM

கொரோனா பரவலை கட்டுப்படுத்திய 10 மாவட்டங்கள்... சற்றே ஆறுதல் தகவல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்திய 10 மாவட்டங்கள்...
கோயம்பேடு பரவலால் தமிழகத்தில் மே மாதத்தில் சென்னை, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், 10 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தை மூலமாக கொரோனா தொற்று பரவல் துவங்கியதைடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 669 பேருக்கு தொற்று ஏற்பட, தமிழகத்தில் தொற்று பரவல் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் முதல் தொற்று உறுதி செய்யப்பட்ட மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரையிலான 54 நாட்களில் 2,323 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஏப்ரல் இறுதியில் கோயம்பேடு சந்தை மூலம் கோரொனா தொற்று பரவல் ஏற்பட தமிழகத்தில் பாதிப்பு திடீரென அதிகரித்தது.

மே 1ம் தேதி ஒரே நாளில் 200க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட, அடுத்தடுத்த நாட்களில் கொரோனா தொற்று பரவல் புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 4,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. தமிழகத்தின் மொத்த பாதிப்பில் 10 நாட்களின் பாதிப்பு 67.75 சதவிகிதம் ஆகும்.

corona localization,containment,counting,comfort,some districts ,கொரோனா பரவல், கட்டுப்படுத்தல், எண்ணிக்கை, ஆறுதல், சில மாவட்டங்கள்

சென்னையில் மட்டும் கடந்த 10 நாட்களில் 2,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையின் மொத்த பாதிப்பில் 10 நாட்களின் பாதிப்பு 76.40 சதவிகிதம் ஆகும்.சென்னையைத் தவிர்த்து, கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், அரியலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர் மாவட்டங்களிலும் கடந்த 10 நாட்களில் கோயம்பேடு தொற்று பரவல் காரணமாக பாதிப்பு அதிகரித்தது.

அரியலூர் ஏப்ரல் 30 வரை 7 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டிருந்தது. இந்த 10 நாட்களில் மட்டும் 268 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பில் இது 97.45 சதவிகித பாதிப்பு இந்த 10 நாட்களில் மட்டும் ஏற்பட்டுள்ளது.

கடலூரில் ஏப்ரல் 30ம் தேதி வரை 27 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இந்த 10 நாட்களில் மட்டும் 368 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பில் 93.16 சதவிகிதம் ஆகும். பெரம்பலூரில் ஏப்ரல் 30 வரை, 9 பேருக்கு ஏற்பட்டிருந்த பாதிப்பு, இந்த 10 நாட்களில் 95 பேருக்கு ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பில் இது 91.34 சதவிகிதம் ஆகும்.

கடந்த 10 நாட்களில் விழுப்புரத்தில் 249 பேருக்கும், திருவள்ளூரில் 282 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களின் மொத்த பாதிப்பில் இந்த 10 நாட்கள் பாதிப்பு என்பது 80 சதவிகிதத்துக்கும் அதிகம். செங்கல்பட்டில் 189 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 96 பேருக்கும் இந்த 10 நாட்களில் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களின் மொத்த பாதிப்பில் இது 70 சதவிகிதத்துக்கும் அதிகம் ஆகும்.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் திடீரென அதிகரித்த தொற்று பரவல் காரணமாக, கடந்த ஒரு வாரத்தில் (மே 3 - 9) தொற்று பரவல் அதிகரித்த மாநிலங்களில் முதலிடத்தை தமிழகம் பிடித்திருக்கிறது. தமிழகத்தின் ஒரு நாளின் தொற்று பரவல் விகிதம் என்பது 17 சதவிகிதமாக உள்ளது. நாட்டிலேயே அதிக தொற்று பாதிப்பு உள்ள மகாராஷ்டிராவில் 8 சதவிகிதமாகவும், குஜராத், டெல்லியில் 6 சதவிகிதமாகவும் உள்ளது. இந்த மூன்று மாநிலங்களை விட ஒரு மடங்குக்கும் அதிகமான வேகத்தில் தமிழகத்தில் தொற்று பரவல் ஏற்பட்டு வருகிறது.

அதேவேளையில், மே மாதம் தொடங்கியதில் இருந்து ஒரு சில மாவட்டங்களில் தொற்று பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கோவை, திருப்பூர், சேலம், மதுரை, தூத்துக்குடி, நாகை, ஈரோடு, சிவகங்கை, திருச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 10 நாட்கள் தொற்று எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்காமல் உள்ளது ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.

Tags :