Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தவறான வரைபடத்தை வெளியிட்ட விக்கிபீடியாவுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு

தவறான வரைபடத்தை வெளியிட்ட விக்கிபீடியாவுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு

By: Nagaraj Thu, 03 Dec 2020 3:58:26 PM

தவறான வரைபடத்தை வெளியிட்ட விக்கிபீடியாவுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு

மத்திய அரசு எச்சரிக்கை... காஷ்மீர் குறித்து தவறான வரைபடத்தை வெளியிட்ட விக்கிபீடியா இணையதளத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர், டுவிட்டர் பயனாளர் ஒருவர், இந்தியா - பூடான் உறவு குறித்த விக்கிபீடியா பக்கம் காஷ்மீரின் வரைபடத்தை தவறாக சித்தரித்திருப்பதை எடுத்துக்கூறி, நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, இந்த விவகாரத்தை விசாரித்த தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விக்கிபீடியாவிற்கு அனுப்பியுள்ள எச்சரிக்கை நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:

action,central government,wikipedia,changes,kashmir ,நடவடிக்கை, மத்திய அரசு, விக்கி பீடியா, மாற்றங்கள், காஷ்மீர்

காஷ்மீரை தவறாக சித்தரிக்கும் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விக்கிபீடியா இணையதளம் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் மீறியுள்ளது. பிரச்னைக்குரிய குறிப்பிட்ட பக்கத்தில் காஷ்மீரின் தவறான படத்தை அகற்ற வேண்டும்.

உடனடியாக மாற்றங்களை செய்யாவிட்டால், விக்கிபீடியா இணையதளத்தை முடக்குவது உள்ளிட்ட பல நடவடிக்கையை, இந்திய அரசு எடுக்க முடியும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|