Advertisement

அமெரிக்காவில் கொரோனாவால் பாதித்த முதல் நாய் பலி

By: Nagaraj Fri, 31 July 2020 10:33:48 PM

அமெரிக்காவில் கொரோனாவால் பாதித்த முதல் நாய் பலி

அமெரிக்காவில் கொரோனாவால் பாதித்த முதல் நாய் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அந்த நாய்க்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நியுயார்க் நகரில் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. கடந்த மூன்று மாதங்களாக இந்த நாய் உயிருக்கு போராடி வந்தது.

நியுயார்க் நகரைச் சேர்ந்த ராபர்ட் மகானே மற்றும் அலிசன் தம்பதி 7 வயதான இந்த ஜெர்மன் ஷெப்பரட் நாயை வளர்த்து வந்தனர். ராபர்ட் மகானேவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வழியாக நாய்க்கும் பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

corona infection,dog,kills,vomiting,treatment ,கொரோனா பாதிப்பு, நாய், பலி, ரத்த வாந்தி, சிகிச்சை

அமெரிக்காவில் கொரோனா பாதித்த முதல் நாய் இதுதான். கொரோனா பாதிப்பு காரணமாக நாய் மூச்சு விட சிரமப்பட்டது. இந்த நாய்க்கு சிகிச்சையளிக்க இரு கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கொரோனாவிலிருந்து மீண்டு விடுமென்று எதிர்பார்ப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நாய் ஜூலை 11- ந் தேதி இறந்து போனதாக அலிசன் மகானே தெரிவித்துள்ளார். இறக்கும் முன் ரத்த வாந்தி எடுத்ததாகவும் அலிசன் கூறியுள்ளார்.

ஆனால், இந்த நாய்க்கு புற்று நோய் பாதிப்பு இருந்ததாகவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் 12 நாய்கள், 10 பூனைகள், புலி மற்றும் சிங்கம் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.

Tags :
|
|