Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் பாதிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது .. அமைச்சர் எ.வ.வேலு

சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் பாதிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது .. அமைச்சர் எ.வ.வேலு

By: vaithegi Tue, 04 Oct 2022 6:52:30 PM

சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் பாதிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது  ..  அமைச்சர் எ.வ.வேலு

சென்னை : சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் மழைக்கால வெள்ளத் தடுப்பு பணிககளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சென்னையில் நீர்வழி கால்வாய்களை தூர்வாரும் பணிகளை முடிக்க வெளிநாட்டு ரோபோடிக் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 10% பணிகள் மட்டுமே மிச்சமிருப்பதால் அதையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

minister a. v. velu,rain,action ,அமைச்சர் எ.வ.வேலு,மழை ,நடவடிக்கை

இதையடுத்து பருவமழைக்கு முன்பதாக மழைநீர் வடிகால் பணிகளை முடிக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.மழை வெள்ளத்தில் பாதிக்காமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

,மேலும் இதனிடையே, சட்டப்பேரவை கூட்ட தொடர் அறிவிப்பு தொடர்பாகவும், தமிழகம் முழுவதும் நடக்கும் கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வு கூட்டம் 10ம் தேதி நடைபெறுகிறது.

Tags :
|