Advertisement

வெடி பொருள் வெடித்ததில் காவலர் பலத்த காயம்

By: Nagaraj Thu, 08 Oct 2020 09:15:18 AM

வெடி பொருள் வெடித்ததில் காவலர் பலத்த காயம்

வெடி பொருள் வெடித்ததில் காவலர் ஒருவர் பலத்த காயமடைந்தார். உடன் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்திரமேரூர் அருகே உள்ள திருப்புலிவனம் கிராமத்தில் கடந்த 2018-ம்ஆண்டு ஜூலை மாதம் சட்ட விரோதமாக வெடி பொருட்களை பதுக்கிவைத்திருந்த காதர் மொய்தீன் என்பவரை உத்திரமேரூர் போலீஸார் கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த வெடி தயாரிப்பு மூலப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அந்த வெடி மூலப்பொருட்களை செயலிழக்க வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

guard,wounded,right leg,explosives,paralyzed ,காவலர், காயம், வலது கால், வெடி பொருட்கள், செயலிழக்க செய்தனர்

இதையடுத்து வெடி பொருட்கள் தடுப்புப் பிரிவு போலீஸார் இந்தவெடிமருந்து மூலப் பொருட்களை உத்திரமேரூர் அடுத்த எடமிச்சி கிராமத்தில் உள்ள மலையடிவாரத்துக்கு எடுத்துச் சென்று செயலிழக்க செய்தனர். வெடி பொருட்களை தொலைவில் இருந்து வெடிக்கச் செய்தனர்.

பின்னர் வெடி பொருட்களை வெடித்து முடித்த நிலையில் பிற பொருட்களை தீயிட்டு எரித்தனர். அப்போது ஒரு வெடி திடீரென்று வெடித்ததில் அருகில் இருந்த காவலர் பாலமுருகன் வலது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை போலீஸார் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
|