Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆயுத பூஜையை ஒட்டி எகிறிய பூக்களின் விலை... கிலோ ரூ.600 வரை விற்பனை

ஆயுத பூஜையை ஒட்டி எகிறிய பூக்களின் விலை... கிலோ ரூ.600 வரை விற்பனை

By: Nagaraj Mon, 03 Oct 2022 4:41:02 PM

ஆயுத பூஜையை ஒட்டி எகிறிய பூக்களின் விலை... கிலோ ரூ.600 வரை விற்பனை

மதுரை: நாளை நாடு முழுவதும் ஆயுதபூஜை விழா என்பதால் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள பூ மார்க்கெட்டில் இன்று பூக்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். மல்லிகை, பிச்சி உள்ளிட்ட வண்ண வண்ண பூக்கள் விற்பனைக்காக குவிந்திருந்தன.

மக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கிச் சென்றனர். கடந்த வாரத்தை விட இன்று இரு மடங்கு விலையில் பூக்கள் விற்பனையானது. கடந்த வாரம் மல்லிகை பூ கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையானது.

இன்று மல்லிகை ஒரு கிலோ ரூ.1,000 முதல் ரூ.1200 வரை விற்கப்படுகிறது. பிச்சி ரூ.800, முல்லை ரூ.900, அரளி ரூ.500, சம்பங்கி ரூ.300, செவ்வந்தி ரூ.200, செண்டு பூ, மரிக்கொழுக்கு ரூ.100 என விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மற்ற பூக்கள் இரு மடங்கு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ayudha puja,flowers,madurai,occasion,price ,ஆயுத பூஜை, பூ மார்க்கெட், மல்லிகை பூ, விலை, விழா

இதுகுறித்து பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது: பூக்கள் வரத்து அதிகமாக இருப்பதால், பூக்கள் விலை கட்டுக்குள் உள்ளது. கடந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மல்லிகைப் பூக்கள் கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது. மல்லிகை பூ வரத்து அதிகமாக உள்ளதால், விலை கட்டுக்குள் உள்ளது என்றனர்.

அதேபோல், ஆயுத பூஜையையொட்டி, மதுரை சந்தைகளில் ஆப்பிள், கொய்யா, மாதுளை, பேரிக்காய் உள்ளிட்ட பழங்கள் ரூ.20 முதல் ரூ.50 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் வாழை இலை, வாழைத்தண்டு, தேங்காய், அவல், பொரியல் போன்ற பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

Tags :