Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அம்புட்டு செலவுக்கு இம்புட்டுதான் வருமானம்... திணறுகிறது மெட்ரோ ரயில் நிர்வாகம்

அம்புட்டு செலவுக்கு இம்புட்டுதான் வருமானம்... திணறுகிறது மெட்ரோ ரயில் நிர்வாகம்

By: Nagaraj Thu, 08 Sept 2022 08:41:50 AM

அம்புட்டு செலவுக்கு இம்புட்டுதான் வருமானம்... திணறுகிறது மெட்ரோ ரயில் நிர்வாகம்

சென்னை: அம்புட்டு செலவுக்கு இம்புட்டுதான் வருமானம்... சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மொத்தம் ரூ.22,149 கோடி செலவு ஆகியுள்ளது. ஆனால், தற்போது வரை ரூ.200 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் 2015-ம் ஆண்டு முதல் ஓடத் தொடங்கியது. தற்போது சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.18,380 கோடி செலவில் 45.10 கிலோ மீட்டர் தொலைவிற்கு செயல்படுத்தப்பட்டது. இதன் இணைப்பு திட்டம் ரூ.3,770 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.


இதன்படி ரூ.22,149 கோடி ரூபாய் செலவில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு, விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது.

கடந்த சில மாதங்களாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், டெல்லி போன்று கூட்டம் நிரம்பி வழிவது இல்லை. சென்னை மெட்ரோ ரயில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 3,01,15,886 பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

tender,inspection,trips,expenditure,revenue,metro rail ,டெண்டர், ஆய்வு, பயணங்கள், செலவு, வருவாய், மெட்ரோ ரயில்

அதாவது, ஜனவரி மாதம் 25,19,252, பிப்ரவரி மாதம் 31,86,683, மார்ச் மாதம் 44,67, 756, ஏப்ரல் மாதம் 45,46,330, மே மாதம் 47,87,846, ஜூன் மாதம் 52,90,390, ஜூலை மாதம் 53,17,659 பேர் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் 2015 - 26.34 லட்சம், 2016ம் ஆண்டு 36.37 லட்சம், 2017ம் ஆண்டு 73.99 லட்சம், 2018ம் ஆண்டு 1.48 கோடி, 2019ம் ஆண்டு 3.13 கோடி, 2020ம் ஆண்டு 1.18 கோடி, 2021ம் ஆண்டு 2.54 கோடி, 2022ம் ஆண்டு 3.01 கோடி பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2019-20-ம் நிதியாண்டில் ரூ.119.25 கோடி, 2020-21ம் நிதியாண்டில் ரூ.30.08 கோடி, 2021-22ம் ஆண்டில் ரூ.85.34 கோடி, 2022-23ம் ஆண்டில் ஜூன் 30ம் தேதி வரை ரூ.44.25 வரை மொத்தம் ரூ.278.92 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ரூ.22,149 கோடி செலவு ஆகியுள்ளது. ஆனால், இதுவரை ரூ.278 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. எனவே, இந்த வழித்தடங்களில் பயணிகளின் எண்ணிக்கை உயர்த்த தனி ஆலோசகர்களை நியமிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த டெண்டரில் 4 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. விரைவில் இந்த டெண்டர் இறுதி செய்யப்பட்டு ஆய்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|
|