Advertisement

திருமண மேடையில் மணமகள் கொடுத்த அதிர்ச்சி

By: Nagaraj Sat, 31 Oct 2020 7:08:23 PM

திருமண மேடையில் மணமகள் கொடுத்த அதிர்ச்சி

மணமகள் கொடுத்த அதிர்ச்சி... தனக்கு மற்றொருவருடன் காதல் இருப்பதாக கூறி மண மேடையிலேயே மணமகனை மணமகள் நிராகரித்த சம்பவம் உதகையில் நிகழ்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த மணமகன் ஆனந்த் என்பவருக்கும் கோத்தகிரி அருகேயுள்ள தூனேரி கிராமத்தை சேர்ந்த பிரியதர்சினி என்பவருக்கும் கடந்த 29 -ஆம் தேதி திருமணம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர். திருமணத்துக்காக மட்டக்கண்டி கிராமத்தில் உற்றார், உறவினர்கள் கூடியிருந்தனர். இவர்கள் படுகர் இனத்தை சேர்ந்தவர்கள் .

படுகர் இன மக்களின் சம்பிரதாயப்படி ,தாலி கட்டுவதற்கு முன் மணப்பெண்ணிடம் மணமகன் மூன்று முறை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்க வேண்டும் . மணப்பெண் சம்மதம் என்று தெரிவித்தால் மட்டுமே மணமகன் தாலியை கட்ட முடியும். அதன்படி, மணமகன் ஆனந்த் மணப்பெண் பிரியதர்ஷினியிடத்தில் 'தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா' என இருமுறை கேட்ட போது அவர் மௌனமாக இருந்தார்.

மூன்றாவது முறையாக மணமகன் கேட்ட போது வெடித்து அழுது எனக்கு சம்மதமில்லை என்று பிரியதர்ஷினி உரக்க கூற திருமண பந்தலில் பதற்றம் தொற்றிக் கொண்டது. பிரியதர்ஷினியை சமாதானப்படுத்த பெற்றோர்கள் முயன்றனர். ஆனாலும் பலன் இல்லை.

bride,rejection,bridal,groom,shock,harsh condemnation ,மணப்பெண், நிராகரிப்பு, மணமேடை, மணமகன், அதிர்ச்சி, கடும் கண்டனம்

மணமகள் பிரியதர்ஷினி மணப்பந்தலில் கூறுகையில், ''தன்னை திருமணம் செய்து கொள்ள வேறு ஒருவர் வருகிறார். ஒரு மணி நேரம் பொறுத்திருங்கள். அவர் எனக்காக தனது திருமண பந்தத்தை முறித்துக் கொண்டவர். என் காதலரின் குழந்தைகளை நான்தான் பார்த்துகொள்ள வேண்டும். இவரை திருமணம் செய்து கொண்டால் அவருக்கு துரோகம் செய்தது போல் ஆகிவிடும். எனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்றவாறே அங்கிருந்து செல்ல முற்பட்டார்.

இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன மாப்பிள்ளை தாலி கட்டாமல் மண மேடையை விட்டு இறங்கி சென்று விட்டார். பின்னர், பெற்றோர் மணமகள் பிரியதர்ஷினியை காரில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர். மேலும், இனி வீட்டுக்கு வர வேண்டாம் எங்கேயாவது சென்று விடும்படி கூறி அவரை அனுப்பி விட்டு பெற்றோர் மட்டும் வீட்டுக்கு அழுதபடி வந்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, இத்தனை நாள் பொறுத்து இருந்து விட்டு மண நாள் வரை காத்திருந்து அந்த பெண் ஏன் சொல்ல வேண்டும். திருமண கனவில் இருந்த மற்றோரு ஆணை ஏன் அவமதிக்க வேண்டுமென்றும் சமூகவலைத் தளங்களில் அந்த பெண்ணுக்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது.

Tags :
|
|
|
|