Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒரே நேரத்தில் ஒலித்த 'ஜன கண மன' கீதத்தால் தெலுங்கானா மாநிலம் ஒரு நிமிடத்துக்கு ஸ்தம்பித்தது

ஒரே நேரத்தில் ஒலித்த 'ஜன கண மன' கீதத்தால் தெலுங்கானா மாநிலம் ஒரு நிமிடத்துக்கு ஸ்தம்பித்தது

By: Nagaraj Wed, 17 Aug 2022 09:45:40 AM

ஒரே நேரத்தில் ஒலித்த 'ஜன கண மன' கீதத்தால் தெலுங்கானா மாநிலம் ஒரு நிமிடத்துக்கு ஸ்தம்பித்தது

ஐதராபாத்: தெலுங்கானா முழுவதும் ஒரே நேரத்தில் தேசிய கீதம் பாடப்பட்டது. முக்கிய இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஒரே நேரத்தில் ஒலித்த 'ஜன கண மன' கீதத்தால் மாநிலம் ஒரு நிமிடத்துக்கு ஸ்தம்பித்தது.

75-வது சுதந்திர தினத்தையொட்டி தெலுங்கானா மாநிலம் முழுவதும் நேற்று காலை 11.30 மணிக்கு தேசிய கீதம் பாடப்பட்டது. கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொது இடங்கள் என்று ஒரே நேரத்தில் ஒலித்த 'ஜன கண மன' கீதத்தால் மாநிலம் ஒரு நிமிடத்துக்கு ஸ்தம்பித்தது. முக்கிய இடங்கள் அனைத்திலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஐதராபாத்தில் நடந்த தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், மந்திரிகள், அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தேசிய கீதம் பாடுவதற்கு முன், நாட்டின் முதல் பிரதமர் நேருவின் சிலைக்கு சந்திரசேகர் ராவ் மலரஞ்சலி செலுத்தினார்.

national anthem,resilience,officers ringing,prisons,metro rail ,தேசிய கீதம், நெகிழ்ச்சி, அதிகாரிகள் ஒலித்தது, சிறைகள், மெட்ரோ ரயில்

தெலுங்கானா முழுவதும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் தேசிய கீதம் பாடப்பட்டதாகவும், மொத்தம் 28 லட்சம் பேர் இதில் பங்கேற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மாநிலத்தில் உள்ள சிறைகள், வயல்வெளிகளிலும் தேசிய கீதம் ஒலித்தது.

ஐதராபாத் மெட்ரோ ரெயில் இயக்கமும் 58 வினாடிகளுக்கு நிறுத்தப்பட்டு, ஊழியர்களும், பயணிகளும் ஒன்றாக தேசிய கீதம் பாடினர். நிஜாமாபாத் மாவட்டத்தில் ஒரு திருமணத்தில் பங்கேற்றவர்களும் எழுந்து நின்று தேசிய கீதம் பாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags :