Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெளி மாநில தொழிலாளர்கள் 30 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

வெளி மாநில தொழிலாளர்கள் 30 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

By: Nagaraj Wed, 20 May 2020 9:28:14 PM

வெளி மாநில தொழிலாளர்கள் 30 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியிலிருந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் முப்பது பேர் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பத்து பேர் குல்பி ஐஸ் விற்றுக்கொண்டிருந்தனர்.

மேலும் கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் மேலும் 20 பேர் என மொத்தம் 30 பேர் கொரோனா ஊரடங்கால் கடந்த ஒன்றரை மாதமாக வருமானமின்றி தவித்து வந்தனர். அவர்கள் அனைவரும், வருவாய்த்துறையினரிடம் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன்பேரில் கெங்கவல்லி வட்டாட்சியர் சிவக்கொழுந்து, 30 பேரையும் தனிப்பேருந்தில் சேலம் வரையிலும், அங்கிருந்து ரயில் மூலம் அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்தார்.

other state,workers,tears,hometown ,வெளி மாநிலம், தொழிலாளர்கள், கண்ணீர் மல்க, சொந்த ஊர்

அதன்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பேருந்தில் அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி தம்மம்பட்டியில் நடைபெற்றது. அவர்கள் அனைவரையும், கெங்கவல்லி வட்டாட்சியர் சிவக்கொழுந்து உட்பட அதிகாரிகள் வழி அனுப்பிவைத்தனர்.

30 பேருக்கும் சேலம் அரசு கலைக்கல்லூரியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சேலத்திலிருந்து உத்தரபிரதேசத்திற்கு செல்ல புதன்கிழமை இரவு 9 மணி ரயிலில் பயணிக்க உரிய ஏற்பாடுகள் அனைத்தும் வருவாய்த்துறையினர் செய்திருந்தனர். தங்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைத்த தமிழக அரசுக்கு, அவர்கள் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.

Tags :
|