Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை (செப்.5) செங்கல்பட்டில் மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி .. மின்தடை

நாளை (செப்.5) செங்கல்பட்டில் மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி .. மின்தடை

By: vaithegi Sun, 04 Sept 2022 7:01:02 PM

நாளை (செப்.5) செங்கல்பட்டில் மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி  ..  மின்தடை

செங்கல்பட்டு : நாளை (செப்.5) செங்கல்பட்டில் மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இதனால் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மறைமலைநகர் கோட்டத்திற்குட்பட்ட மாம்பாக்கம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என்று மறைமலைநகர் கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

எனவே அதன்படி நாளை இப்பகுதியில் நாளை (செப்.5) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்றும் அறிவித்துள்ளார். அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் வழக்கம் போல் மின்சாரம் விநியோகிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்படுகிறது.

electric resistance,brick ,மின்தடை ,செங்கல்பட்டு

இதனையடுத்து மறைமலைநகர் கோட்டத்திற்குட்பட்ட மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான, மாம்பாக்கம் ஜோதி நகர், பொன்மார் செல்லியம்மன் கோவில் தெரு, வேங்கடமங்கலம், காசா கிராண்டு, மதுரப்பாக்கம், மூலச்சேரி ஆகிய பகுதிகளிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (செப்.5) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

இதனால் இப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags :