Advertisement

மின் கம்பி அறுந்து விழுந்ததால் ரயில்கள் நிறுத்தம்

By: Nagaraj Tue, 16 Aug 2022 9:31:19 PM

மின் கம்பி அறுந்து விழுந்ததால் ரயில்கள் நிறுத்தம்

வேலூர்: காட்பாடி அடுத்த சேவூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததால் நடுவழியில் சென்னை யிலிருந்து பெங்களூர் கோவை செல்லும் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

சென்னையில் இருந்து கோவை நோக்கி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்த போது வேலூர் மாவட்டம் சேவூர் ரயில் நிலையம் அருகே ரயிலின் மின்சார ஒயர் அறுந்து விழுந்ததால் சென்னையில் இருந்து வரும் அனைத்து ரயில்களும் பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

information,power line,outage,trains,delay ,தகவல், மின் கம்பி, அறுந்தது, ரயில்கள், தாமதம்

தற்போது 15 பேர் கொண்ட இரயில்வே மின் பொறியாளர் குழுவினர் டவர் வேகன் வண்டியை கொண்டு அருந்து விழுந்துள்ள உயர் மின் அழுத்த கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் பணிகள் முடிவடைந்து போக்குவரத்து தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

கம்பி அறுந்து பழுது ஏற்பட்டதால் திருவனந்தபுரம், லால் பாக் மற்றும் வாராந்திர இரயில் ஒன்றும் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக தாமாகி வருகிறது.

Tags :
|
|