Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொய்யான செய்திகளை பரப்புபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை

பொய்யான செய்திகளை பரப்புபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை

By: Nagaraj Sun, 16 Oct 2022 10:29:26 PM

பொய்யான செய்திகளை பரப்புபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை

துருக்கி: துருக்கியில் இனி பொய்யான செய்திகளை பரப்புபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற புதிய சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

துருக்கி ஜனாதிபதி எர்டோகன் (Recep Tayyip Erdoğan), ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் செயல்படுவதாக குற்றம்சாட்டி வந்தார்.

imprisonment,information,new-law,parliament,turkey ,சிறை தண்டனை, தகவல், துருக்கி, நாடாளுமன்றம், புதிய சட்டம்

இத்தோடு, துருக்கியில் தற்போது வாரம்தோறும் அரசு சார்பில், அந்தந்த வாரம் வெளியான பொய்யான செய்திகள் மற்றும் அதன் உண்மை தன்மை குறித்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இனி பொய்யான தகவல் பரப்பினால், சம்பந்தப்பட்ட நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை துருக்கி அரசு கொண்டு வந்தது. இதற்கு தற்போது துருக்கி நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது.

Tags :