Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டதால் குறை கூறுகின்றனர்; அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டதால் குறை கூறுகின்றனர்; அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

By: Nagaraj Mon, 11 May 2020 7:58:35 PM

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டதால் குறை கூறுகின்றனர்; அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

பொய் சொல்கிறார்கள்... கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த அமெரிக்க அரசியல்வாதிகளும், மீடியாக்களும் தங்கள் மீது குறை சொல்வதாக சீனா தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரசால் அமெரிக்கா மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில், தற்போது வரை 13,67, 963 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80,787 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் குறித்து சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவும் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.


corona,failure,china retaliation,usa,responsibility ,கொரோனா, தோல்வி, சீனா பதிலடி, அமெரிக்கா, பொறுப்பு

கொரோனா பரவல் குறித்து சீனா உண்மையான தகவல்களை மறைத்துவிட்டதாக கடுமையாக குற்றம்சாட்டினர். மேலும் பல குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். கொரோனா உருவானது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது இணையதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசியல்வாதிகளும் தோல்வியடைந்துவிட்டனர். இதனை மறைக்க, அவர்களும், அந்நாட்டு மீடியாக்களும் சீனா மீது பொய் குற்றச்சாட்டுகளை சீனா மீது தெரிவிக்கின்றனர்.

corona,failure,china retaliation,usa,responsibility ,கொரோனா, தோல்வி, சீனா பதிலடி, அமெரிக்கா, பொறுப்பு

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்ததால், டிரம்ப் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சீனா மீது குற்றம்சாட்டுகின்றனர். அமெரிக்கா முன்னாள் அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் தெரிவித்தபடி, சில மக்களை கொஞ்ச காலம் ஏமாற்றலாம். அனைத்து மக்களையும் கொஞ்ச காலம் ஏமாற்றலாம்.

ஆனால், எப்போதும் மக்களை ஏமாற்ற முடியாது.கொரோனா வைரஸ், வூஹானில் கண்டுபிடிக்கப்பட்டாலும், அது அங்கு தோன்றவில்லை. உண்மையில், எங்கு தோன்றியது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. வூஹானில் உள்ள வைரஸ் ஆய்வகத்தில் கொரோனா உருவாக்கப்படவில்லை. கொரோனா குறித்து உலகத்திற்கு சரியான நேரத்தில் தெரிவிக்கப்பட்டது. வைரஸ் குறித்த விவகாரத்தில், நாங்கள் வெளிப்படையாகவும், பொறுப்பாகவும் நடந்து கொண்டோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|