Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் இன்று பொறுப்பேற்பு

பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் இன்று பொறுப்பேற்பு

By: Nagaraj Thu, 19 Nov 2020 10:00:47 AM

பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் இன்று பொறுப்பேற்பு

இன்று பொறுப்பேற்பு... பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் டெல்லியில் இன்று காலை பொறுப்பேற்கிறார்.

டெல்லியில் வானதி சீனிவாசன் பொறுப்பு ஏற்கும் நிகழ்வு மிக எளிமையாக நடைபெறும் என பாஜக தலைமை தகவல் தெரிவித்துள்ளது. பாஜக கட்சியில் இணைந்த வானதி சீனிவாசன், 1993 முதல் அக்கட்சியின் பல்வேறு பதவிகளில் வகித்து வருகிறார். இவர் தேசிய செயற் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.

vanathi srinivasan,women,leader,responsibility,bjp ,வானதி சீனிவாசன், மகளிரணி, தலைவர், பொறுப்பேற்பு, பாஜக

தற்போது தமிழக பாஜகவின் துணைத் தலைவர்களில் ஒருவராக பதவி வகித்து வரும் வானதி சீனிவாசனுக்கு பாஜக மகளிரணியின் அகில இந்திய தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் வானதி சீனிவாசனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது பலரது பாராட்டுக்களைப் பெற்று தந்துள்ளது.

இந்நிலையில் வானதி சீனிவாசன் டெல்லியில் தேசிய மகளிரணித் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார். இவர் அரசியல் பிரமுகர் மட்டுமின்றி மூத்த வழக்கறிஞர் என்பது கூடுதல். இவரை தேசிய மகளிரணித் தலைவராக அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|