Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிலச்சரிவால் மூடப்பட்ட கொச்சி-தனுஷ்கோடி சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி

நிலச்சரிவால் மூடப்பட்ட கொச்சி-தனுஷ்கோடி சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி

By: Nagaraj Thu, 11 Aug 2022 5:57:50 PM

நிலச்சரிவால் மூடப்பட்ட கொச்சி-தனுஷ்கோடி சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி

மூணாறு: வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி... நிலச்சரிவால் மூடப்பட்ட கொச்சி - தனுஷ்கோடி சாலையில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், மூணாறில் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்ட தேவிகுளம் கேப் ரோடு சாலையில் கடந்த 7ம் தேதி மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன.

இருப்பினும் மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலை சீரமைப்பில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே அப்பகுதியில் நேற்று மழை சற்று ஓய்வடைந்ததை அடுத்து சாலை சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

passenger,happiness,honey,landslide,permission,vehicle ,பயணிகள், மகிழ்ச்சி, தேனி, நிலச்சரிவு, அனுமதி, வாகனம்

இதனையடுத்து அந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்லும் வகையில் சீரமைக்கப்பட்டு நேற்று மாலை முதல் போக்குவரத்துக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இருப்பினும் சாலையில் உருண்ட பாறைகள் ஒருபுறமாக தற்போது வரை கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் அடுத்தடுத்து நடைபெறும். இதனால் போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் கூறினர்.

சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து மூணாறிலிருந்து தேனி செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
|