Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் எந்தெந்த டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது? என்ற பட்டியல் 1 வாரத்தில் வெளியிட்டப்படும்.. அமைச்சர் செந்தில்

தமிழ்நாட்டில் எந்தெந்த டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது? என்ற பட்டியல் 1 வாரத்தில் வெளியிட்டப்படும்.. அமைச்சர் செந்தில்

By: vaithegi Mon, 05 June 2023 3:25:07 PM

தமிழ்நாட்டில்  எந்தெந்த டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது?  என்ற  பட்டியல் 1 வாரத்தில் வெளியிட்டப்படும்..  அமைச்சர் செந்தில்

சென்னை : டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் சட்டப்பேரவையில் அண்மையில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து அதன்படி கருணாநிதி பிறந்த நாளில் 500 மதுபான கடைகளை மூடுவது தொடர்பாக முதலமைச்சர் அறிவிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியது. மூடப்படும் மதுபான கடைகளின் பட்டியலை தயார் செய்து டாஸ்மாக் நிர்வாகம் அரசுக்கு அனுப்பியதாகவும் கூறப்பட்டது.

minister senthil,tasmac shops ,அமைச்சர் செந்தில், டாஸ்மாக் கடைகள்

இந்த நிலையில் விரைவில் மூடப்பட உள்ள 500 டாஸ்மாக் கடைகளை இறுதி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி , 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.

எனவே 1 வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்புக்காக டாஸ்மாக் மதுபான கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதற்கான பணிவுகள் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அவர் கூறினார்.


Tags :