Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இனி அரசியல் கட்சிக்களுக்காக பணியாற்ற மாட்டேன்... பிரசாந்த் கிஷோர் திட்டவட்டம்

இனி அரசியல் கட்சிக்களுக்காக பணியாற்ற மாட்டேன்... பிரசாந்த் கிஷோர் திட்டவட்டம்

By: Nagaraj Thu, 22 Sept 2022 7:00:22 PM

இனி அரசியல் கட்சிக்களுக்காக பணியாற்ற மாட்டேன்... பிரசாந்த் கிஷோர் திட்டவட்டம்

நாக்பூர்: இனி அவ்வளவுதான்... இனி எந்த அரசியல் கட்சிக்காகவும் பணியாற்றப் போவதில்லை என தோ்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலையொட்டி ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி பிகார் முதல்வர் நிதீஷ் குமாருடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கடந்த 14 ஆம் தேதி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பானது 45 நிமிடங்கள் நடைபெற்றது.

எனினும் இந்த சந்திப்பில் அரசியல் தொடர்பாக எதுவும் விவாதிக்கப்படவில்லை எனவும் வழக்கமான சந்திப்பு மட்டுமே எனவும் நிதீஷ் குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2024 மக்களவைத் தேர்தலில் நிதீஷ் குமார் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் பிரசாந்த் கிஷோருடனான சந்திப்பு இந்திய அரசியல் களத்தில் கவனத்தை பெற்றது.

இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் காங்கிரஸ் தொடங்கியுள்ள ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை தேர்தல் நடைபெறும் குஜராத்திலோ அல்லது வேறு ஏதேனும் பாஜக ஆளும் மாநிலத்திலோ தொடங்கியிருக்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

propaganda,people,belief,idea,national scale,influence ,
பிரசாரம், மக்கள், நம்பிக்கை, யோசனை, தேசிய அளவு, தாக்கம்

முன்னாள் பாஜக எம்எல்ஏ ஆஷிஷ் தேஷ்முக், கிழக்கு மகாராஷ்டிர பகுதிக்கு தனி மாநில அந்தஸ்தை பெறுவதற்கான வியூகத்தை வகுக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரசாந்த் கிஷோர், தனி மாநில கனவை நனவாக்க அப்பகுதி மக்கள் ஒன்றுபட்ட முயற்சி தேவை என அழைப்பு விடுத்தவர், "மக்களுக்கு நம்பிக்கை இருந்தால், தனி மாநில யோசனை தொடர முடியும்" என்று கூறினார்.

மேலும், "போராட்டம் அதிகார மையத்தை அடைய வேண்டும். அது தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பிரசாரம் சமூகத்தில் இருந்து வெளிப்பட வேண்டும்," என்று கிஷோர் கூறினார்.

Tags :
|
|
|