Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை உட்பட சில மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கா? மக்கள் அச்சம்

சென்னை உட்பட சில மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கா? மக்கள் அச்சம்

By: Nagaraj Wed, 15 June 2022 8:40:26 PM

சென்னை உட்பட சில மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கா? மக்கள் அச்சம்

சென்னை: மீண்டும் ஊரடங்கா? சென்னை உட்பட சில மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாகுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாகுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 332 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. செங்கல்பட்டில் 60 பேருக்கும், கோவையில் 23 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

people,fear,corona,curfew,chennai,minister ,மக்கள், அச்சம், கொரோனா, ஊரடங்கு, சென்னை, அமைச்சர்

சென்னையில் இன்று, செய்தியாளர்களிடம், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், கொரோனா தொற்று அதிகரிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 300-ஐ கடந்த நிலையில் இன்று 400-ஐ தாண்ட வாய்ப்பு உள்ளது.

சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 200-ஐ தாண்ட வாய்ப்பு உள்ளது. சென்னையில் கொரோனா தொற்றை குறைத்தால் மற்ற பகுதிகளில் குறையும். சென்னையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தினால் மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் பார்த்துக் கொள்ள முடியும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தொற்று எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, கொரோனா பரவல் அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், முதற்கட்டமாக, நோய் தொற்றைக் கட்டுப்படுத்த, மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags :
|
|
|
|