Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யப்பா முடியலைப்பா... முடியலை: விஜய் போஸ்டரை பார்த்து மக்கள் ஷாக்

யப்பா முடியலைப்பா... முடியலை: விஜய் போஸ்டரை பார்த்து மக்கள் ஷாக்

By: Nagaraj Tue, 25 Aug 2020 8:45:45 PM

யப்பா முடியலைப்பா... முடியலை: விஜய் போஸ்டரை பார்த்து மக்கள் ஷாக்

யப்பா முடியலைப்பா விஜய் ரசிகர்களின் ஆர்வக்கோளாறை என்று பலரும் ஒரு போஸ்டரை பார்த்து ஷாக் ஆகின்றனர். என்ன காரணம் என்கிறீர்களா?

மதுரையில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்கள் விஜய்க்கே அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்றால் மிகையில்லை.

vijay,shock,poster,madurai,social website ,விஜய், அதிர்ச்சி, போஸ்டர், மதுரை, சமூக வலைத்தளம்

அந்த போஸ்டரில், மக்கள் இயக்கத்தின் புரட்சி தலைவரே என நடிகர் விஜய்யை எம்ஜிஆர் போலவும் சித்தரித்தும், மக்கள் இயக்கத்தின் புரட்சித்தலைவியே என விஜய் மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும் அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

விஜய்-சங்கீதா திருமண நாளை கொண்டாடும் விதமாக ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை உருவகப்படுத்தும் தோற்றத்தில் இருவரையும் சித்தரித்துள்ளனர் அவரது ரசிகர்கள்.

ஆனால் இந்த போஸ்டர் அதிமுக மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழ்த்து தெரிவிக்க இப்படியா என சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

Tags :
|
|
|