Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கலை, அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பதிவு செய்யலாம்

கலை, அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பதிவு செய்யலாம்

By: vaithegi Mon, 08 May 2023 10:06:12 AM

கலை, அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பதிவு செய்யலாம்

சென்னை: தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் இயங்கும் 1,547 அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி கொண்டு வருகின்றன. இதையடுத்து இவற்றில் 143 கலை, அறிவியல் கல்லூரிகள் அரசு நடத்துபவை. இதில், 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

இந்நிலையில், 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாக உள்ள நிலையில் தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பதிவு இன்று துவங்குகிறது.

application form,arts,science course ,விண்ணப்பதிவு ,கலை, அறிவியல் படிப்பு

இதனை அடுத்து இன்று முதல் மே 19-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாணவர்களின் தரவரிசை பட்டியல் மே 23-க்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் எனவும் அரசு கலைக்கல்லூரிகளில் சேர முதல்கட்ட பொதுகலந்தாய்வு மே 30 முதல் ஜூன் 9-ந் தேதி வரை நடபெறும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.

Tags :
|