Advertisement

மாமியார் கோபித்து கொண்டு சென்றதால் மருமகள் தற்கொலை

By: Monisha Mon, 25 May 2020 4:40:09 PM

மாமியார் கோபித்து கொண்டு சென்றதால் மருமகள் தற்கொலை

புதுவையை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி அன்னலட்சுமி (வயது 24). இவர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.

மணிகண்டன் தனது மனைவி மற்றும் தாயார் செண்பகவடிடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் அன்னலட்சுமிக்கும் அவரது மாமியார் செண்பகவடிவுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது செண்பக வடிவு கோபித்து கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அன்னலட்சுமி சோகமாக இருந்து வந்தார். அவரை அவரது தாயார் அம்சவள்ளி மற்றும் கணவர் மணிகண்டன் சமாதானம் செய்து வந்தனர். ஆனாலும் அன்னலட்சமி சோகத்துடன் இருந்து வந்தார்.

hanging suicide,police prosecution,investigations,puducherry ,தூக்குபோட்டு தற்கொலை,போலீசார் வழக்குப்பதிவு,விசாரணை,புதுச்சேரி

இந்தநிலையில் நேற்று காலை மணிகண்டன் தனிக்குடுத்தனம் செல்வதற்காக வாடகை வீடு பார்க்க வெளியே சென்று விட்டார்.

அப்போது தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அன்னலட்சுமி துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த பெரியக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :