Advertisement

மாலை சிற்றுண்டிக்கு தகுந்த உணவு பொரி உப்புமா செய்முறை

By: Nagaraj Sun, 22 Jan 2023 5:06:18 PM

மாலை சிற்றுண்டிக்கு தகுந்த உணவு பொரி உப்புமா செய்முறை

சென்னை: காலை உணவாகவோ, மாலையில் சிற்றுண்டியாகவோ பொரி உப்புமா செய்து சாப்பிடலாம். எளிதில் செய்யக்கூடிய இந்த பொரி உப்புமா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
பொரி – 3 கப்வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 2கேரட், பொடியாக நறுக்கியது – 3 டீஸ்பூன்எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டிமஞ்சள் – 1/4 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவு

தாளிக்க
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டிகடுகு – 1/2 தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டிகடலை பருப்பு – 2 தேக்கரண்டிவேர்க்கடலை – 2 மேஜைக்கரண்டிகறிவேப்பிலை – 1 கொத்து

grams,chickpeas,peanuts,fries,green chillies,carrots ,உளுந்து, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, பொரி, பச்சை மிளகாய், கேரட்

செய்முறை: முதலில் கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு போட்டு வெடித்ததும், உளுந்து, கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும். வேர்க்கடலை அப்பொழுதுதான் உள்வரை வறுபடும்.

பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கருவேப்பிலை சேர்த்து, 1 நிமிடம் வதக்கவும். இதனிடையே பொறியை அளந்து, நன்கு அலசவும். ஒரு வடிகட்டியில் தண்ணீரை முற்றிலுமாக வடியும்படி வைக்கவும்.

மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும். தண்ணீர் இல்லாமல் வடிந்த பொறியை சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கி, இறக்கவும். எலுமிச்சம் பழ சாறு சேர்த்து கலக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை. அப்படியே சாப்பிடலாம்.

Tags :
|
|