Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பாதாம் பர்பி செய்முறை

By: Nagaraj Wed, 29 June 2022 11:56:21 PM

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பாதாம் பர்பி செய்முறை

சென்னை: குழந்தைகள் விரும்பி சாப்பிட பாதாம் பர்பி செய்து பாருங்கள். உங்களையே சுற்றி, சுற்றி வருவார்கள்.
தேவையான பொருள்கள்:
பாதாம் பருப்பு - 200 கிராம்சீனி - 300 கிராம்பால் - 100 மில்லிஇனிப்பில்லாத கண்டஸ்டு மில்க் - 100 மில்லிகேசரி கலர் - சிறிதுநெய் - 4 மேஜைக்கரண்டி

almonds,milk,saffron,ghee,burpee,children ,பாதாம், பால், கேசரி கலர், நெய், பர்பி, குழந்தைகள்

செய்முறை:முதலில் பாலை லேசாக சூடு பண்ணி அதில் பாதாம் பருப்பை 15 நிமிடம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு பாதாம் பருப்பின் தோலை எடுத்து ஊற வைத்துள்ள பாலோடு சேர்த்து மிக்ஸ்யில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு டிரேயில் 2 மேஜைக்கரண்டி நெய்யை தடவி தனியாக வைக்கவும். அடுப்பில் நான்ஸ்டிக் கடாயை வைத்து அரைத்து வைத்துள்ள பாதாம் பருப்பு கலவையை போட்டு 3 நிமிடம் வரை இடை விடாமல் கிளறவும்.


பிறகு சீனியை சேர்த்து நன்றாக கிளறவும். இறுதியில் கண்டன்ஸ்டு பால், கேசரி கலர், மீதமுள்ள நெய் சேர்த்து பர்பி பதம் வரும் வரை இடை விடாமல் கிளறவும். பர்பி பதம் வந்தவுடன் நெய் தடவிய டிரேயில் பரப்பவும். லேசாக சூடு இருக்கும் போது துண்டுகள் போடவும்.

Tags :
|
|
|