Advertisement

சத்து நிறைந்த வாழைப்பழ தேநீர்!

By: Monisha Thu, 23 July 2020 4:58:02 PM

சத்து நிறைந்த வாழைப்பழ தேநீர்!

வாழைப்பழத்தில் தேநீரில் பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் மற்றும் வைட்டமின் பி 6 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இத்தகைய சத்து நிறைந்த வாழைப்பழத்தில் தேநீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
தண்ணீர் - 2 கப்
வாழைப்பழம் - 1
லவங்கப்பட்டை - சிறிய துண்டு
டீ தூள் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்

செய்முறை
அகன்ற பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும். கொதிக்கத் தொடங்கியதும் வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி போடவும். பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து 10 நிமிடங்கள் வாழைப்பழத்தை வேகவிடவும். பின்னர் சிறிதளவு லவங்கப்பட்டை, டீ தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். பின்பு வடிகட்டி ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகலாம்.

Tags :
|