Advertisement

குழந்தைகளும் விரும்பி சாப்பிட வெண்டைக்காய் குழம்பு

By: Nagaraj Wed, 13 July 2022 10:15:05 PM

குழந்தைகளும் விரும்பி சாப்பிட வெண்டைக்காய் குழம்பு

சென்னை: குழந்தைகளும் விரும்பி சாப்பிட வெண்டைக்காய் குழம்பை இப்படி செய்து கொடுங்கள். ருசித்து சாப்பிடுவார்கள்.

தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, வெங்காயம் - 1, கீறிய பச்சை மிளகாய், தக்காளி - தலா 2, பூண்டு - 2 பல், புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், தேங்காய் துண்டுகள் - 2, சீரகம் - ஒன்றரை டீஸ்பூன், கறிவேப்பிலை, குழம்பு பொடி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

tomatoes,turmeric,onions,green chillies,garlic ,தக்காளி, மஞ்சள்தூள், வெண்டைக்காய், பச்சைமிளகாய், பூண்டு

செய்முறை:வெங்காயம், வெண்டைக்காய், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, வெண்டைக்காய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும்.

தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கி... மிளகாய்த்தூள், தேங்காய் - சீரகம் விழுதைப் போட்டு வதக்கவும். கடைசியாக புளியைக் கரைத்து ஊற்றி, சிறிது தண்ணீர் விட்டு, குழம்பு பொடி சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். அருமையான ருசியில் வெண்டைக்காய் குழம்பு தயார்.

Tags :
|