- வீடு›
- சமையல் குறிப்புகள்›
- மொறு, மொறுவென பாகற்காயில் சிப்ஸ் செய்முறை
மொறு, மொறுவென பாகற்காயில் சிப்ஸ் செய்முறை
By: Nagaraj Mon, 26 Oct 2020 2:01:56 PM
பாகற்காய் சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது. மருத்துவ குணங்கள் அதிகளவு உடைய கொண்ட பாகற்காயில் சிப்ஸ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானவை:
பாகற்காய் - 2
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
கடலை மாவு - 4 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை: பாகற்காயினை வட்டவடிவில் வெட்டிக் கொள்ளவும். அதனுடன் உப்பு போட்டு 3 முதல் 4 முறை நன்கு அலசவும்.
இதில் உள்ள கசப்புத் தன்மை ஓரளவு போனதும், ஒரு பாத்திரத்தில் மிளகாய்த் தூள், அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி கலவையில் கலக்கிய பாகற்காயினைப் போட்டு பொரித்து எடுத்தால் பாகற்காய் சிப்ஸ் ரெடி.
Tags :
salt |