Advertisement

ஆரோக்கியம் அளிக்கும் கொத்தமல்லி கார பால்ஸ் செய்முறை

By: Nagaraj Mon, 07 Dec 2020 08:17:40 AM

ஆரோக்கியம் அளிக்கும் கொத்தமல்லி கார பால்ஸ் செய்முறை

உடல் ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அந்த வகையில் கொத்தமல்லி கார பால்ஸ் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


தேவையானவை:

அரிசி ரவை - 2 கப்,
கொத்தமல்லித்தழை - சின்ன கட்டு,
பச்சை மிளகாய் - 3,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
நெய் - 2 டீஸ்பூன்,
புளி - சிறிதளவு,
கடுகு - ஒன்றரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு, - தேவையான அளவு.

coriander,coconut,tamarind,peanuts ,கொத்தமல்லித்தழை, தேங்காய்த்துருவல், புளி, கடலைப்பருப்பு

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், புளி ஆகியவற்றை வதக்கி, பின்னர் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, 5 கப் நீர் ஊற்றவும்.

அதில் அரைத்த விழுது, பெருங்காயத்தூள், உப்பு, நெய் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதிக்கும்போது, அடுப்பை ‘சிம்’மில் வைத்து, அரிசி ரவையை சேர்த்து கைவிடாமல் கிளறி, மூடிபோட்டு 10 நிமிடம் வேகவிட்டு இறக்கவும். ஆறியதும் சிறு உருண்டைகளாகப் பிடித்து, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

Tags :