Advertisement

கிராமத்து பாணியில் முருங்கைக்கீரை குழம்பு செய்முறை

By: Nagaraj Mon, 04 Sept 2023 09:28:16 AM

கிராமத்து பாணியில் முருங்கைக்கீரை குழம்பு செய்முறை

சென்னை: முருங்கைக்கீரையை வைத்து முருங்கைக்கீரை கடையல், முருங்கைக்கீரை சாம்பார், பொரியல், என்று விதவிதமாக செய்து சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு ஆரோக்கியம் தான்.

ஆனால் நாவிற்கு ருசியாக செய்து கொடுத்தால் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவார்கள். ஒருமுறை முருங்கைக்கீரையில் இப்படி குழம்பு வைத்து சுடச்சுட சாதத்தில் ஊற்றி கொஞ்சமாக நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். ருசி ஆளையே தூக்கும்.

தேவையான பொருட்கள் மசாலா அரைக்க: மிளகு - 2 டீஸ்பூள் சீரகம் - 2 டீஸ்பூன் தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது) காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூஸ் குழம்பு தயாரிக்க: பாசிப்பருப்பு - 100 கிராம் முருங்கைக்காய் -1 கத்தரிக்காய் - 3 முருங்கைக்கீரை - இரண்டு கைப்பிடி அளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு

தாளிக்க: கடுகு- ஒரு டீஸ்பூன் உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன் பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - தேவையான அளவு

cardamom,curry leaves,pepper,cumin,chillies,chickpeas ,முருங்கைக்கீரை, குழம்பு, கறிவேப்பிலை, மிளகு, சீரகம், மிளகாய், கடலைப்பருப்பு

செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் அதில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு மிதமான தீயில் சிவக்க வறுத்து ஆற வைக்க வேண்டும். பின்பு இவற்றுடன் தேங்காய் சேர்த்து மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பசைபோல அரைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். பாதி அளவு வெந்ததும் அதனுடன் முருங்கைக்காய், சுத்தரிக்காய் ஆகியவற்றை சேர்த்து வேக வைக்க வேண்டும். அவை முக்கால் பதத்துக்கு வெந்ததும், முருங்கைக்கீரையை அதனுடன் சேர்த்து வேகவைக்க வேண்டும். பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலா, மஞ்சள்தூள், உப்பு சேர்ந்து கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் கொத்தமல்லித் தழையை அதன்மேலே தூவ வேண்டும். சிறிய கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்பு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்,

இதை தயாரித்து வைத்திருக்கும் குழம்பில் ஊற்றி கலக்கவும், இப்போது சுவையான "முருங்கைக்கீரை குழம்பு' தயார்.

Tags :
|
|