Advertisement

அருமையான சுவையில் கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்முறை

By: Nagaraj Mon, 08 Aug 2022 9:44:35 PM

அருமையான சுவையில் கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்முறை

சென்னை: அருமையான சுவையில் கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்முறை உங்களுக்காக.

தேவையானவை:

சிக்கன் - 1 கிலோ
மிளகாய் தூள் - 2 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 4
எலுமிச்சை - அரை மூடி
கலர்பொடி - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
கருவேப்பிலை - 2 ஆர்க்கு
உப்பு - தேவைக்கேற்ப

chicken,chili powder,turmeric powder,pepper powder,garam masala powder ,சிக்கன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள்

செய்முறை: காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக இடித்து கொள்ளவும். சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசறி பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.

இரண்டு மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து பிசறி 5 நிமிடம் வைக்கவும். வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டங்களை போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தயார். சூடாக பரிமாறவும்..
காரம் அதிகமானால் சிறிது எலுமிச்சை பழச்சாற்றினை பிழிந்துவிடவும். நன்கு மொறு மொறு என்று வேண்டுமென்றால் மிதமான தீயில் சற்று அதிக நேரம் வேகவிடவும். தீ அதிகமாக இருந்தால் சிக்கன் கருகிவிடும்.

Tags :