Advertisement

சுவையான முறையில் முட்டை தக்காளி குழம்பு செய்முறை

By: Nagaraj Mon, 14 Dec 2020 09:51:01 AM

சுவையான முறையில் முட்டை தக்காளி குழம்பு செய்முறை

சாம்பார், வற்றல் குழம்பு என்று வைத்து அலுத்து போய்விட்டதா. சுவையான முட்டை தக்காளி குழம்பு செய்து அசத்துங்கள். உங்கள் குடும்பத்தினரும் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.

தேவையானவை

முட்டை- 2
நாட்டுத்தக்காளி - 3
வெங்காயம்- 2
மஞ்சள்தூள்-கால் ஸ்பூன்
சோம்பு- கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள்- 3 ஸ்பூன்
பட்டை- சிறிய துண்டு
முந்திரிப்பருப்பு - 4
தேங்காய்த்துருவல்- 2 ஸ்பூன்
கொத்தமல்லி தழை-சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

eggs,tomatoes,onions,chili powder,turmeric powder ,முட்டை, தக்காளி, வெங்காயம், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள்

செய்முறை: சோம்பு, முந்திரிப்பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும். குழம்பு திக்கானதும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.சுவையான முட்டை தக்காளி குழம்பு ரெடி.

Tags :
|
|