Advertisement

சுவையான முறையில் ரவாதோசை செய்முறை

By: Nagaraj Fri, 18 Dec 2020 8:17:02 PM

சுவையான முறையில் ரவாதோசை செய்முறை

சுவையாகவும் அதே நேரத்தில் சுலபமான முறையில் ரவா தோசை செய்முறை உங்களுக்காக.

தேவையான பொருட்கள்:


அரிசி மாவு - 1 1/2 கப்
மைதா மாவு - 4 டேபிள் ஸ்பூன்
கெட்டியான மோர் (அ) புளித்த தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகு சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு (பொடி)
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு (பொடி)
பச்சை மிளகாய் - 5 (பொடி)
முந்திரி - 15

rawa dosa,delicious,ginger,coriander,green chillies ,ரவா தோசை, சுவையாக, இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாய்

செய்முறை: கொத்தமல்லி, முந்திரி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, ரவை, மைதா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் மோர் விட்டு கரைக்கவும். பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அரைமணி நேரம் வைக்கவும்.

மாவு, சாதாரண தோசை மாவைவிட நீர்க்க இருக்கவேண்டும். அதனால் ஒரு கப்பிற்கும் அதிகமாகவே தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். தோசை வார்க்கும் முன்பாக மாவுடன் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, உடைத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.

தோசைக்கல்லை காயவைத்து மாவை ஊற்றவும். வழக்கமாக தோசை ஊற்றுவது போல செய்யக்கூடாது. கல் நன்றாக சூடானதும் கரண்டியால் ரவாதோசை மாவைக் கலக்கிவிட்டு 2 கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் தெளித்தாற்போல ஊற்றவும்.

சுற்றிலும் எண்ணெய் விட்டு, தோசை மீதும் கொஞ்சம் எண்ணெய் தெளித்து வேகவிடவும். முறுவலாக வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து சட்னிகளுடன் சூடாகப் பரிமாறவும். சூப்பரான சுவையான ரவா தோசை தயார்.

Tags :
|