Advertisement

சேமியா பகளாபாத் செய்து அசத்துங்கள்!!!

By: Nagaraj Fri, 10 June 2022 11:27:49 PM

சேமியா பகளாபாத் செய்து அசத்துங்கள்!!!

சென்னை: அருமையான சுவையில் சேமியா பகளாபாத் செய்து குடும்பத்தினரை அசத்துங்கள்.

தேவையானவை: சேமியா கால் கப், தயிர் (கடைந்தது) ஒன்றரை கப், உப்பு தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் 6, பச்சை மிளகாய் 1, இஞ்சி 1 கொட்டைப் பாக்கு அளவு.

தாளிக்க: எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, காய்ந்த மிளகாய் 1, வறுத்த முந்திரி 3, கறிவேப்பிலை 1 ஆர்க்கு, மல்லித்தழை (இலைகள் மட்டும் பொடியாக நறுக்கியது) 2 டீஸ்பூன்.

coriander,yogurt,evening,semia,taste ,மல்லித்தழை, தயிர், மாலை நேரம், சேமியா, சுவை

செய்முறை: ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து, சேமியாவைக் கொட்டி, உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். (தண்ணீரை வடிக்க வேண்டாம்). வெங்காயத்தைப் பொடியாக, பச்சை மிளகாயை சிறு வட்ட வளையங்களாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, துருவிய இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, முந்திரிப் பருப்புடன் சேமியா கஞ்சியில் ஊற்றவும்.
பின் கடைந்த தயிரை அத்துடன் கலந்து, மல்லித்தழை தூவிப் பரிமாறவும். மாலை நேரத்துக்கான எளிய ஸ்நாக்ஸ் என்பதுடன், விருந்துகளிலும் சுவை கூட்டும் அயிட்டம் இது.

Tags :
|
|