Advertisement

எளிதான முறையில் வீட்டிலேயே முட்டை பிரியாணி செய்முறை

By: Nagaraj Sat, 06 Aug 2022 10:33:18 PM

எளிதான முறையில் வீட்டிலேயே முட்டை பிரியாணி செய்முறை

சென்னை: குழந்தைகள் விரும்பி சாப்பிட வீட்டிலேயே எளிமையான முறையில் முட்டை பிரியாணி செய்து கொடுங்கள். அதை எப்படி செய்யலாம் என்று வாங்க தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :
முட்டை - 10பாசுமதி அரிசி - 1/2 கிலோதக்காளி - 3பெரிய வெங்காயம் - 2கடைந்த தயிர் - 1 கப்எண்ணெய் - 500 mlநெய் - 1/4 கப்உப்பு - 2 டீஸ்பூன்,மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்இஞ்சி + பூண்டு - 4 டீஸ்பூன்

அரைக்க வேண்டியவை:
பச்சை மிளகாய் - 4பட்டை - 2லவங்கம் - 2ஏலக்காய் - 5புதினா - 1 கைப்பிடிகொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி.

egg,oil,tomato,curd,egg,onion ,முட்டை, எண்ணெய், தக்காளி, தயிர், முட்டை, வெங்காயம்

செய்முறை: அரிசியைக் நன்றாக கழுவி ஊறவிடவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்று அரைத்துக்கொள்ளுங்கள்.

முட்டை, 1/4 டீஸ்பூன் உப்பு, அரைத்த மசாலா 1/2 டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு துளி இவற்றை சேர்த்து மிக்ஸியில் .அரைத்து கொள்ளுங்கள் .அடித்த முட்டையை குழிப்பணியார சட்டியில் பணியாரம் போல் ஊற்றி சுட்டெடுங்கள் அல்லது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி கலவையை விட்டு, இட்லி போல் வேகவிடுங்கள். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக வெட்டுங்கள். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலா, தக்காளி, தயிர், மஞ்சள் தூள், உப்பு போட்டு சுருள சுருள வதக்கவும். எண்ணெய் கக்கி வரும் போது, ஒரு கப் சுடு தண்ணீர் விட்டு தளதளப்பாக இருக்கும் போது முட்டையை போட்டு கிளறி கொதிக்க விடுங்கள்.

இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் வென்னீர் வைத்து, ஊறவைத்த அரிசியை உப்பு போட்டு, அரைப்பதமாக வேகவிட்டு வடித்து, கொதிக்கும் முட்டை கலவையில் போட்டு கிளறி ‘தம்’ போட்டு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

Tags :
|
|
|
|
|