Advertisement

ஆரோக்கியம் நிறைந்த அவல் உருளைக்கிழங்கு உப்புமா செய்முறை

By: Nagaraj Mon, 17 Oct 2022 10:27:12 AM

ஆரோக்கியம் நிறைந்த அவல் உருளைக்கிழங்கு உப்புமா செய்முறை

சென்னை: காலை வேளையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் அவல் உருளைக்கிழங்கு உப்புமா செய்து பாருங்கள். ருசி பிரமாதமாக இருக்கும். இது மிகச்சிறந்த காலை உணவு மட்டுமின்றி, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.


தேவையான பொருட்கள்: அவல் - 2 கப் உருளைக்கிழங்கு - 1 (தோலுரித்து சிறு துண்டுகளாக்கப்பட்டது) எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 3-5 (பொடியாக நறுக்கியது) வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன், கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன் * உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் * கடுகு - 1 டீஸ்பூன் * பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் * கறிவேப்பிலை - சிறிது * உப்பு - சுவைக்கேற்ப * சர்க்கரை - 1/2 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன் * மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன் * மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் * எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப * கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) * தண்ணீர் - 1/2 கப்

potatoes,lemon juice,aval,salt,sugar ,உருளைக்கிழங்கு, எலுமிச்சைச்சாறு, அவல், உப்புமா, சர்க்கரை

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் அவலை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் தண்ணீர், உப்பு, சர்க்கரை, டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேர்க்கடலையை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

பின் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்க வேண்டும். பிறகு அதில் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து அதில் உருளைக்கிழங்கு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் வைத்து உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும்.


உருளைக்கிழங்கு வெந்ததும், தீயை அதிகரித்து, உருளைக்கிழங்கை பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். பின்பு அதில் அவலை சேர்த்து நன்கு கிளற வேண்டும். அவல் நன்கு சூடானதும், மேலே கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி இறக்கினால், உருளைக்கிழங்கு அவல் உப்புமா தயார்.

Tags :
|
|