Advertisement

ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி புலாவ் செய்முறை

By: Nagaraj Sun, 06 Dec 2020 09:51:52 AM

ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி புலாவ் செய்முறை

கொத்தமல்லி இலையில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகை வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, உறுப்புக்களின் இயல்பான இயக்கத்துக்கு என்று பெரிதும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் புலாவ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள் :

சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 1 1/2 கப்
எண்ணெய் - தேவைக்கு
அரிசி - 1 1/2 கப்

அரைக்க :

கொத்தமல்லி தழை - 1 கட்டு
பூண்டு - 5 பல்
உப்பு - ருசிக்கேற்ப
பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப

coriander,pulao,spices,onions,green chillies ,கொத்தமல்லி, புலாவ், மசாலா, வெங்காயம், பச்சை மிளகாய்

செய்முறை :

அரிசியை முதலில் வேகவைத்து உதிரியாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்து பின் வெங்காயத்தை போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அரைத்த மசாலாவை வாணலியில் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். எண்ணெய் ஓரங்களில் வர ஆரம்பித்தவுடன் சாதத்தை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும். சுவையான கொத்தமல்லி புலாவ் ரெடி.

Tags :
|
|
|