Advertisement

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் ராகி மசாலா இட்லி செய்முறை

By: Nagaraj Thu, 07 July 2022 7:48:12 PM

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் ராகி மசாலா இட்லி செய்முறை

சென்னை: உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது ராகி. இதில் ராகி மசாலா இட்லி செய்து பாருங்கள். ருசி அருமையாக இருக்கும்.

தேவையானவை :

நான்கு கப் ராகி மாவு,
முக்கால் கப் உளுந்து,
கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு,
மூன்று காய்ந்த மிளகாய்,
கறிவேப்பிலை,
ஒரு குடைமிளகாய்,
ஒரு கேரட்,
ஒரு வெங்காயம்,
இஞ்சித் துண்டு,
பச்சைப் பட்டாணி
மஞ்சள் தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு கொத்தமல்லித் தழை

ragi flour,chilies,carrots,onions,ginger,green peas ,
ராகி மாவு, குடைமிளகாய், கேரட், வெங்காயம், இஞ்சி, பச்சைப்பட்டாணி

செய்முறை: நான்கு கப் ராகி மாவைக் கெட்டியாகக் கரைத்து வையுங்கள். முக்கால் கப் உளுந்தை இரண்டு மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து மாவில் சேர்த்து உப்பு போட்டு இட்லி மாவு பதத்தில் முதல் நாள் இரவே கரைத்து வையுங்கள் மறுநாள் நன்றாகப் பொங்கி வந்து இருக்கும். இந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, இட்லிகளை ஆற வைத்துச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வையுங்கள். கடாயில் எண்ணெய் சேர்த்துக் கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு, இரண்டு அல்லது மூன்று காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகிய வற்றைச் சேர்த்துத் தாளியுங்கள்.


அதில் ஒரு குடைமிளகாய், ஒரு கேரட், ஒரு வெங்காயம், இஞ்சித் துண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிச் சேருங்கள். சிறிதளவு பச்சைப் பட்டாணி, மஞ்சள் தூள் போட்டு வதக்குங்கள். பிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து இட்லித் துண்டுகளைப் போட்டு நன்றாகப் புரட்டியெடுங்கள். கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்குங்கள். அருமையான சுவையில் ராகி மசாலா இட்லி தயார்.

Tags :
|
|