Advertisement

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் முருங்கைக்கீரை சூப் செய்வது எப்படி?

By: Monisha Thu, 10 Dec 2020 08:51:35 AM

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் முருங்கைக்கீரை சூப் செய்வது எப்படி?

மழை காலங்களில் இதமாக இருக்கும் முருங்கைக்கீரை சூப்பில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது. இது பெண்களுக்கு மாதவிடாய் வலிக்கு சிறந்த வலி நிவாரணியாக உள்ளது. உடல் எடை குறைக்கவும், அடர்த்தியான, கருமையான முடி வளரவும் உதவி புரிகிறது. இதை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. இரும்பு சத்து நிறைந்த இந்த சூப் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை
மல்லி விதை
சின்ன வெங்காயம்
பூண்டு
சீரகம்
தக்காளிப்பழம்
புதினா
மல்லித்தழை
கறிவேப்பிலை
தண்ணீர்
உப்பு
மிளகு

health,spinach,onions,garlic,tomatoes ,ஆரோக்கியம்,முருங்கைக்கீரை,வெங்காயம்,பூண்டு,தக்காளி

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் அளவிற்கு தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். அந்த தண்ணீரிலே ஒரு ஸ்பூன் அளவிற்கு மல்லி விதை போட்டு கொள்ள வேண்டும். அதனுடன் 5 அல்லது 6 பல் பூண்டு, சின்ன வெங்காயம் 7 அல்லது 8, இதனுடன் 3/4 ஸ்பூன் அளவிற்கு சீரகமும், சிறிதாக வெட்டிய ஒரு சிறிய தக்காளி பழம் இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தனையும் தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். நன்றாக கொதிக்க விட்டால் தான் மல்லி மற்றும் சீரகத்தின் வாசனை தண்ணீரில் இறங்கும்.

அதன் பிறகு சுத்தம் செய்து வைக்கப்பட்டிருக்கும் முருங்கைக் கீரையை வெறும் கீரை மட்டும் சேர்க்காமல் கொஞ்சம் காம்புடன் சேர்த்து இந்த கொதித்த தண்ணீரில் போட்டுக் கொள்ள வேண்டும். ஏனெனில் முருங்கைகீரையின் காம்பிலும் நல்ல சத்துக்கள் உள்ளது. முருங்கைக் கீரையை தண்ணீரில் போட்ட பிறகு அதனை ஒரு முறை நன்றாக ஒரு கரண்டியால் கலந்து விடுங்கள்.

கலந்து விட்ட பிறகு கொஞ்சமாக புதினா இலையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை இவற்றையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்க. இவற்றில் புதினா இலை சிறிதளவே போதுமானது. இவற்றையெல்லாம் போட்ட பிறகு மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளலாம். இப்போது இந்த கீரையை 15 நிமிடங்கள் மூடாமல் திறந்து வைத்து வேக விட வேண்டும்.

15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு, பிறகு வடிகட்டி எடுக்க வேண்டும். வடிகட்டிய கீரையை ஆறிய பிறகு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அரைத்த கீரையை மீண்டும் வடிகட்ட, முதலில் வடிகட்டிய அந்த தண்ணீரையே விட்டு கலக்கி ஒருமுறை கூட நன்றாக வடிகட்டி எடுக்க வேண்டும். இப்போது ஆரோக்கியமான முருங்கைக் கீரை சூப் ரெடி.

Tags :
|
|
|