Advertisement

ஆரோக்கியம் நிறைந்த இஞ்சி சட்னி செய்வது எப்படி?

By: Monisha Tue, 29 Dec 2020 5:54:50 PM

ஆரோக்கியம் நிறைந்த இஞ்சி சட்னி செய்வது எப்படி?

உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் தரும் இஞ்சியை வைத்து சுவை மிகுந்த சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
இஞ்சி – 1/2 கப்
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 5
கருவேப்பிலை – தேவையான அளவு
புளி – ஒரு கோலி அளவு
வெல்லம் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கு ஏற்ப
கடுகு – சிறிதளவு

ginger chutney,health,tamarind,curry leaves,taste ,இஞ்சி சட்னி,ஆரோக்கியம்,புளி,கருவேப்பிலை,சுவை

செய்முறை
முதலில் இஞ்சியைக் கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். புளியை சிறிது தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் அதை தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதே வாணலியில் கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வறுக்கவும். ஊறவைத்த புளியை சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வதக்கிய அனைத்து பொருட்களுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து அதனுடன் புளிக் கரைசலையும் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை தாளித்து கொட்டவும். இப்போது சுவையான இஞ்சி சட்னி ரெடி!

Tags :
|