Advertisement

மீதம் வந்த இட்லியில் மஞ்சூரியன் செய்வது எப்படி?

By: Monisha Mon, 26 Oct 2020 09:27:33 AM

மீதம் வந்த இட்லியில் மஞ்சூரியன் செய்வது எப்படி?

மீதம் வந்த இட்லியில் வித்தியாசமான சுவையில் குழந்தைகளுக்கு இட்லி மஞ்சூரியன் செய்து கொடுப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
இட்லி – 3
அரிசி மாவு – 3/4 தேக்கரண்டி
மிளகாய் பொடி – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 4
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
குடை மிளகாய் – 1
மைதா மாவு – 3/4 தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 1 தேக்கரண்டி
சில்லி சாஸ் – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
ஸ்பிரிங் ஆனியன் – 1/4 கப்
வெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

idli,garlic,onion,manchurian,butter ,இட்லி,பூண்டு,வெங்காயம்,மஞ்சூரியன்,வெண்ணெய்

செய்முறை
முதலாவது இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். அதில் மிளகாய் தூள் மற்றும் அரிசி மாவை கலந்து கொள்ளுங்கள். அதன்பின் கடாயில் வெண்ணெயை உருக்கி இட்லியை மிதமான சூட்டில் கிளறுங்கள். அது பொன்னிறமாக மாறியதும் இறக்கி விடுங்கள்.

அதன்பின் இட்லியை தனியாக எடுத்து வைத்து விட்டு கடாயில் சிறிதளவு வெண்ணெய் போட்டு அது உருகியதும் பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் அதில் குடை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதங்கி அதில் மூன்று வகையான சாஸ் வகைகளை ஊற்றுங்கள்.

அதன்பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து மைதா மாவு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிரேவி பதத்தில் நன்கு கலக்குங்கள். கெட்டிப் பதம் வந்ததும் இட்லியை சேர்த்து கிளறுங்கள். மசாலா நன்றாகக் கலந்ததும் ஆனியன் தூவி இறக்குங்கள். அதன்பின் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறி மகிழுங்கள்.

Tags :
|
|
|