Advertisement

சத்தான கொள்ளு இட்லி பொடி செய்வது எப்படி?

By: Sonia Mon, 07 Sept 2020 4:06 PM

சத்தான கொள்ளு இட்லி பொடி செய்வது எப்படி?

இட்லி, தோசைக்கு சுவையான பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் கொள்ளு இட்லி பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கொள்ளு - அரை கப்
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு

செய்முறை
வாணலியை சூடாக்கி அதில் கொள்ளு, பெருங்காயத்தூளை கொட்டி வறுக்கவும். மிளகாயையும் வாசம் வரும் வரை வறுத்தெடுத்துக்கொள்ளவும். ஆறிய பின்னர் அனைத்தையும் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். சுவையாக கொள்ளு இட்லி பொடி ரெடி. இந்த பொடியை சூடான சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.

Tags :
|
|