Advertisement

உருளைக்கிழங்கு நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாப்பது எப்படி?

By: Nagaraj Fri, 11 Nov 2022 8:21:36 PM

உருளைக்கிழங்கு நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாப்பது எப்படி?

சென்னை: ஒரு சிலர் மொத்தமாக காய்கறிகளை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். இதனால் கெடாமல் வைத்துக்கொள்ள காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் உருளைக்கிழங்கை வெளியில் வைப்பதனால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். ஆனால் முளைக்க தொடங்கி விடும். அதை தடுப்பது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.


உருளைக்கிழங்குகள் எளிதில் அழுகும் தன்மை கொண்டது. என்றாலும் வெகு நாட்கள் இருந்தால் முளைக்கத் தொடங்கிவிடும். இது கிழங்கு வகை என்பதால் செடி முளைக்கத் தொடங்குகிறது. மேலும் இது சுவையில் பாதிப்பு ஏற்படுத்துகிறது.

potatoes,superfast,germination,fruits,moisture ,உருளைக்கிழங்கு, அதிவிரைவு, முளைத்தல், பழங்கள், ஈரப்பதம்

முளைத்த உருளைக்கிழங்கில் உள்ள ஆல்கலாய்டுகள் மனிதர்களிடையே நச்சுத்தன்மை ஏற்படுத்துகிறது. வெயில் படாத இடத்தில் உருளைக்கிழங்கை வைப்பதன் மூலம் புதிதாக வைத்திருக்க முடியும். எனவே உருளைக்கிழங்கை வெப்பம் இல்லாத இருட்டான ஒரு இடத்தில் அல்லது பெட்டிகளில் வைக்க வேண்டும்.

உருளைக்கிழங்கை காயவைத்து வைப்பதனால் விரைவில் முளைப்பதில்லை. ஒரு பையில் பச்சை மூலிகைகள் எதையாவது சேர்த்து அதனுடன் உருளைக்கிழங்கை வைப்பதன் மூலம் முளைப்பதை தடுக்க முடியும். பழங்களையும் உருளைக்கிழங்கையும் ஒன்றாக வைப்பதன் மூலம் பழங்களில் உள்ள ஈரப்பதம் உருளைக்கிழங்கு அடைந்து அதிவிரைவில் முளைக்க வாய்ப்புள்ளது. எனவே இரண்டையும் தனித்தனியாக வைக்க வேண்டும்.

Tags :
|