Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இடியாப்ப கிச்சடி

By: Nagaraj Sat, 01 Oct 2022 7:04:53 PM

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இடியாப்ப கிச்சடி

சென்னை: குழந்தைகள் விரும்பி சாப்பிட இடியாப்ப கிச்சடி செய்து கொடுங்கள்.

தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 1/4 கிலோதேங்காய் துருவல் - 1/4 கோப்பைபெரிய வெங்காயம் - 2தக்காளி - 2காய்ந்த மிளகாய் - 2பூண்டு - 6 பல்இஞ்சி - 1/4 துண்டுமசாலாத்தூள் - ஒரு சிட்டிகைமஞ்சள் தூள் - ஒரு சிட்டிகைகருவேப்பிலை - 2 கொத்துகொத்தமல்லித்தழை - சிறிதளவுகடுகு - 1/4 தேக்கரண்டிகடலைப் பருப்பு - 1/4 தேக்கரண்டிஊளுந்து - 1/4 தேக்கரண்டிஎண்ணெய் -2 தேக்கரண்டிஉப்பு - தேவையான அளவு

chickpeas,chickpeas,fenugreek seeds,dry chillies,and ediyappam ,கடலைப் பருப்பு, ஊளுந்து, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், இடியாப்பம்

செய்முறை:அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு ஊறிய அரிசியை நன்றாக கழுவி அதனுடன் துருவிய தேங்காயைப் போட்டு அதனை மைய அரைத்தெடுக்கவும். இட்லி பாத்திரத்தில் ஊற்றி இட்லியாக வார்க்கவும்.

இட்லியை சூடு ஆறுவதற்குள் இடியாப்ப குழலில் இட்டு பிழிந்து எடுத்து வைக்கவும். பெரிய வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக அரிந்து கொள்ளவும். இஞ்சியையும், பூண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, ஊளுந்து, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.

வெங்காயத்தைப் போட்டு வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் மசாலாத்தூள், மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இதில் ஆறிய இடியாப்பத்தை போட்டு நன்றாக கிளறவும். பிறகு நறுக்கிய கொத்தமல்லித் தலையைப் போட்டு இறக்கவும்.

Tags :