Advertisement

சுவையில் அள்ளும் அவல்கேசரியை வீட்டிலேயே செய்வோம் வாங்க

By: Nagaraj Wed, 31 May 2023 7:37:02 PM

சுவையில் அள்ளும் அவல்கேசரியை வீட்டிலேயே செய்வோம் வாங்க

சென்னை: சுவையில் அள்ளும் அவல்கேசரியை வீட்டில் செய்து கொடுத்து குட்டீஸை குஷிப்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள் :
அவல் - 250கிராம்,சர்க்கரை - 250 கிராம்,நெய் - தேவையான அளவு ,ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்,முழு முந்திரி - 20, உலர் திராட்சைகள் - 10,பாதாம், பிஸ்தா தேவையான அளவு ,கேசரிகலர் - 1 சிட்டிகை,உப்பு - 1 சிட்டிகை.

gram,groundnut,curry leaves,dry chillies,oil ,உளுந்து, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், எண்ணெய்

செய்முறை : வாணலியில் சிறிது நெய் விட்டு அவலை 3-4 நிமிடங்கள் குறைந்த மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்

முழுமையாக ஆறவிடவும். பிறகு இதை மிக்ஸியில் ரவை போல கரகரப்பாக பொடிக்கவும். அவலை நறநறப்பாக இல்லாமல் நைஸாக அரைத்து செய்தால் இது அல்வா போலவே இருக்கும். ஒரு கடாயில் 2 tbs நெய்யை சூடாக்கி முந்திரியை சேர்க்கவும். பொன் நிறம் வரும்வரை வறுக்கவும். அதனுடன் உலர் திராட்சைகள் சேர்த்து பொன்னிறமாகும் வரை தொடர்ந்து வறுக்கவும் .

அதே நெய்யில் அரைத்த அவலை சேர்த்து 2 - 3 நிமிடம் வறுக்கவும். வறுத்த அவலில் 1 கப் சூடான நீரை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கிளறி பின்பு 2 tbs நெய் சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து தொடர்ந்து கிளறவும்.

Tags :
|