Advertisement

ருசியான முறையல் காரசாரமாக மாங்காய் தொக்கு செய்முறை

By: Nagaraj Thu, 26 Jan 2023 06:55:36 AM

ருசியான முறையல் காரசாரமாக மாங்காய் தொக்கு செய்முறை

சென்னை: ருசியான முறையில் காரசாரமாக மாங்காய் தொக்கு செய்து பாருங்கள். இதோ செய்முறை.

மாங்காய் - 1 கப் துருவியதுநல்லெண்ணெய் - 1/2 கப்கடுகு - 1 ஸ்பூன்பெருங்காய தூள் - 2 சிட்டிகைமஞ்சள் பொடி -1/4 ஸ்பூன்வெந்தய பொடி - 1/2 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுவற்றல்தூள் - 1 ஸ்பூன்

mango,chilli powder,oil,fenugreek,turmeric powder ,மாங்காய், மிளகாய் தூள், எண்ணெய், வெந்தயம், மஞ்சள் பொடி

செய்முறை: அரை ஸ்பூன் வெந்தயத்தை வெறும் வாணலியில் போட்டு, சிவக்கும் வரை வறுத்து ஆறியபின் பொடி செய்து கொள்ளவும். பத்து வர மிளகாயை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து, சூடு ஆறியவுடன், நன்கு அரைத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ளவும்.

மாங்காயை தோல் சீவி துருவியில் துருவிக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் பெருங்காயம் போட்டு, சிவந்த்தும் கடுகு போடவும். கடுகு வெடித்த பின் துருவிய மாங்காயை போட்டு கிளறவும்.

ஒரு நிமிடம் மூடி வைத்து விட்டு, பிறகு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு மூன்றையும் சேர்த்து நன்கு கிளறி, மீண்டும் மூடி வைத்து விடவும். மூன்று நிமிடம் கழித்து, மூடியை திறந்து, நன்கு கிளற வேண்டும்.

மாங்காயிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும். அவ்வாறு எண்ணெய் பிரியும் வரை கிளற வேண்டும். பின், பொடித்த வெந்தயத்தை தூவி, நன்கு கிளறி, இறக்க வேண்டும். அருமையான சுவையில் மாங்காய் தொக்கு ரெடி.

Tags :
|
|