- வீடு›
- சமையல் குறிப்புகள்›
- புதுக்கோட்டை தக்காளி காய் காரக்குழம்பு செய்முறை
புதுக்கோட்டை தக்காளி காய் காரக்குழம்பு செய்முறை
By: Nagaraj Mon, 05 June 2023 7:08:34 PM
சென்னை: புதுக்கோட்டை தக்காளி காய் காரக்குழம்பு செய்து பார்ப்போம் வாங்க. அருமையான சுவையில் இருக்கும்.
தேவை: தக்காளிக்காய் – ¼ கிலோ, நறுக்கிய தக்காளி – 2 கைப்பிடி, சின்ன வெங்காயம் – 2 கைப்பிடி, மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன், குழம்புப் பொடி – 3 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, எண்ணெய் – 1½ குழிக்கரண்டி.
தாளிக்க: கடுகு – 2 டீஸ்பூன், வெந்தயம் – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிது.
செய்முறை: நறுக்கிய தக்காளியை தண்ணீர் விடாமல் ஜூஸ் ஆக்கவும். தாளிப்பில் சின்ன வெங்காயம், தக்காளிக் காயைப் போட்டு வதக்கிய பின், தக்காளி ஜூஸை ஊற்றி கொதிக்க விடவும். குழம்புப் பொடி, புளிக்கரைசல், உப்பு போட்டு நன்கு கொதித்த பின் இறக்கவும்.
Tags :
tomatoes |
onions |
chillies |